TR Mahalingam, Suseela
Crd- 2
Male ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும்
மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
St- 2, Ld- 10, Acc- 6
Female துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டு போன பின் தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டு போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்தும் கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி நானே
கண்ணாளனுடன் கலந்தானந்தமே பெற
காவினில் வாடும் கிளி தானே
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
Male { ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... } { 5 }
அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ
அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மனம்
சிந்தி வரும் தென்றல் தானோ இன்பம்
தங்கும் மயில் இந்த மானோ
Female { ஆ... ஆஹ்ஹ ஹஹ ஹா ஹா...
ஓஹ்ஹொஹொஹொ ஹோ ஹோ
ம்... ம்... லாலலல லாலாலா... } { 10 } ( St- 1 )
அன்பு மனம் கூடுவதில் துன்பம் இல்லை
Male அஞ்சி அஞ்சி ஓடுவதில் இனபம் இல்லை
Female வீணை மட்டும் இருந்தால் நாதம் இல்லை
Male மீட்டும் விரல் பிரிந்தால் கானம் இல்லை
Both இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
Male நன் நேரமிதே...
Female மனம் மீறிடுதே...
Both நன் நேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்
Male { ஆ... ( ஆ... ) ஆ... ( ஆ... ) ஆ... ஆ... } { 6 }
Both { ஆ... ஆ... } { 2 }
Male ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும்
மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
முகில் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
0 comments:
Post a Comment